நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

ஊடகப் பத்திரிகையாளர்களாகிய நாம் இம்மண்ணின் மைந்தர்கள். உழைப்பாலும், வியர்வையாலும் இந்நாட்டை வளப்படுத்தியவர்கள். காலம் காலமாய்ப் பல வழிகளில் தொண்டு செய்துகொண்டிருப்பவர்கள்;.  இருப்பினும் பல சிறு மற்றும் குறும் ஊடகப் பத்திரிகையாளர்கள், நம் துறையில் பின்தங்கிய நிலையில், ஏழ்மையில் வாழ்கின்றார்கள். இவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதே இச்சங்கத்தின் தலையாய நோக்கம்.

நம் உரிமைகளுக்காகப் போராடும் உணர்வும், சங்கக்கூட்டமைப்பும் நம்மிடம் இல்லாததே இதற்குக் காரணம்.  நம்மிடையே ஒற்றுமையில்லை. சங்கங்களாகவும், ஐக்கியங்களாகவும்  பிரிந்து செயல்படுகின்றேரம். இதனால் வாழ்வில் நமக்கு எவ்வித முறையான முன்னேற்றமும் இல்லை. உரக்கப் பேசுவோம் நம் உரிமைக்காக ஒன்று சேர்ந்து உடனடியாக வலுவான சங்கக் கூட்டமைப்பை உருவாக்குவோம்.

 

திசை திருப்பப்படும் உண்மைகளும் – கட்சி உடைமையான ஊடகங்களும்

உண்மையில், ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் இடைவிடாமல் ஊடகங்களில் வெளிக்கொண்டு வர வேண்டிய மக்கள் பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. காவிரி பிரச்சனை, அரசியல் கட்சிகளின் துரோகங்கள், அழிக்க வரும் அந்நிய முதலீடு, பாடாய்ப்படுத்தும் பவர் கட், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கேஸ், மளிகைச் சாமான்கள், வீட்டுவாடகை, கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள், ரியல் எஸ்டேட், பொருளாதார மோசடிகள், வரதட்சணை, மதமோதல்கள், சாதி சண்டைகள், அதிகரிக்கும் வேலைநேரம், சீரழியும் சுற்றுச்சூழல்… என அனுதினமும் ஆயிரமாயிரம் புதிய பிரச்சனைகள் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகளின் அடிப்படைகளை மறைத்து வெறுமனே சென்சேஷனாக மாற்றுவதை மட்டும் சேனல்கள் செய்து வருகின்றன.
இதற்குக் காரணம் அரசியல் கட்சித் தலைவர்களைச் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையில் முதலீடு செய்து, அதைச்  செயல்படுத்துகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் சொந்தமாக பத்திரிக்கைகளைப் வெளியிடுகின்றனர் மற்றும் பல தொலைக்காட்சி சேனல்களையும் நான் நீ என்று பேரட்டி போட்டுக் கொண்டு நடத்தி வருகின்றார்கள்.
அரசியல் கட்சிகள் பத்திரிக்கை மற்றும் ஊடகம் நடத்துவதின் மூலகாரணம், அவர்களுடைய தலைவர்களையும் அவர்கள் நடத்தும் மாநாடுகளையும் விளம்பரப்படுத்திக் கொள்ளவே.
அரசியல் கட்சிகள் நடத்தி வரும் பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனத்தில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் ஊடகப் பத்திரிக்கை தர்மம் முடக்கப் படுகின்றது. மக்கள் மத்தியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதுள்ள நம்பிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் அரசியல் தலையீடு.

உத்தம ஊடகப் பத்திரிகையாளர்களின் கரங்களை வலுப்படுத்த மற்றும் அரசியல்வாதிகள் நடத்தும் பொய்மையை உரைக்கும் ஊடகங்களையும் பத்திரிகைகளையும் எதிர்க்க ஒரு பத்திரிக்கை மற்றும் ஊடகம் தேவைபட்டது.

ஒவ்வெரரு குடிமகனும் இந்நாட்டின் நிருபர் தான். இரண்டு பேர் சேர்ந்து பேசினால் அது ஒரு செய்தி.  தகவல் பரிமாற்றமும் இவ்வகைதான். அந்தச் செய்தி அரசியல் பற்றி இருக்கலாம், சினிமாவைப் பற்றி இருக்கலாம், அல்லது கிரிகெட் விளையாட்டைப் பற்றியும் இருக்கலாம். இது போன்ற பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இயற்கையாகவே மனிதன் செய்தியாளர் ஆகத்தான் இருக்கின்றான். அப்படித்தான் கடவுள் அவனைப் படைத்துள்ளார். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையில் ஊழியர்கள் இரண்டு வகையானவர்கள். ஒரு வகை முழுநேர ஊழியர்கள்,
மற்றொரு வகை பகுதிநேர ஊழியர்கள், அவர்களைத்தான் நாங்கள் குடியுரிமை நிருபர்  என்று அழைக்கிறோம்.

குடியுரிமை நிருபர் ஆவதற்கான முறையான பயிற்சி அளித்து அவர்களுக்கு சங்கத்தின் மூலம் ‘குடியுரிமை நிருபர்’   என்ற அங்கிகாரம் வழங்கப்படும்.  குடியுரிமை நிருபர்கள் சாதி, மதம் கடந்த அரசியல் கட்சி சாரா  உண்மையை உரைக்கும் நிருபர்களாக செயல்படுவர்.

 

Close Bitnami banner
Bitnami